வடிவங்கள் அறிவோம்
கணிதம் சொல்லும் பாடமொன்று இனிதாய் கற்றிடலாம் இன்று கண்மணிக் குழந்தைகள் வாருங்கள் கவனித்துக் கேட்டு அறிந்திடுங்கள். வட்டம் சதுரம் முக்கோணம் கோளம் கூம்பு கனசதுரம் வடிவம் பலவும் இருந்தாலும் வடிவாய்க் கற்றுப் பயனடைவோம். வட்டத்துக்கு உதாரணம் சொல்வது மிகவும் எளிதாகும் வளையல் வளையம் குறுந்தகடும் கலயத்தின் வாயும் கருவிழியும் தோசையும் ஆப்பமும் நாணயமும் சக்கரமும் வட்ட வடிவமாகும். சதுரத்துக்கு உதாரணம் சொல்வது மிகவும் எளிதாகும் சதுரங்கப் பலகை, தாயக்கட்டம் கேரம்மேலும் படிக்க…