ஹலோ செல்லக் குட்டீஸ்! பொங்கல் எல்லாம் எப்படி போச்சு? கரும்பு, பொங்கல் எல்லாம் சாப்பிட்டாச்சா? என குதூகலத்துடன் சொன்னது அறிவாளி ரோபோ பிண்டு.

ஹாய் பிண்டு! வந்துட்டியா இன்னிக்கு நம்ம என்ன எக்ஸ்பிரிமெண்ட் செய்யப் போறோம். சீக்கிரம் சொல்லேன் என்றாள் அங்கு வந்த அனு.

இன்னிக்கு நம்ம செய்யப் போற எக்ஸ்பிரிமெண்ட் ஒரு அட்டகாசமான ‘லாவா லேம்ப்’ என்றது பிண்டு.

அனு, “அப்படியா சூப்பர் சூப்பர் பிண்டு அதுக்குத் தேவையான பொருட்கள் என்னென்ன வேணும்னு சொல்லு நான் எடுத்து வைக்கிறேன்”.

தேவையான பொருட்கள்

1. பேக்கிங் பவுடர்

2. குளிர்ந்த நீர்

3. பெரிய கண்ணாடிக் கோப்பை

4. சமையல் எண்ணெய்

5. ஃபுட் கலரிங்

6. எலுமிச்சைச் சாறு/ வினீகர் – சிறிதளவு.

செய்முறை

1. கண்ணாடி ஜாடியில் இரண்டு அல்லது மூன்று கரண்டி பேக்கிங் புவடரை போடவும்

2. பிறகு அந்த ஜாடியில் கால்வாசி அளவிற்கு குளிர்ந்த நீரை ஊற்றவும்

3. பின்பு தங்களுக்கு பிடித்த ஃபுட் கலரை சிறிதளவு தண்ணீரில் ஊற்றி அந்தக் கலவையை நன்றாக கலக்கவும்.

4. அடுத்து அந்த ஜாடியில் முக்கால் அளவிற்கு சமையல் எண்ணெயை ஊற்றவும்

5. இறுதியாக ஒரு கரண்டி எலுமிச்சை சாறு அல்லது வீனிகரை அந்தக் கலவையில் ஊற்றவும்.

lavalamp

இந்த கலவையை ஒரு இருட்டு அறையில் கொண்டு போய் வைத்துவிட்டு அந்த ஜாடியின் பின்புறம் ஒளிரும் டார்ச்சை வைக்கவும். பிறகு பாருங்கள் அட்டகாசமான லாவா லேம்ப் ரெடி. உங்களுக்குப் பிடித்த பல வண்ணங்களில் செய்து மகிழுங்கள் என்று முழு செய்முறையை விளக்கிச் சொன்னது பிண்டு.

“வாவ்! ரொம்ப ஈஸியான அதே சமயத்துல இன்ட்ரெஸ்டிங் எக்ஸ்பிரிமெண்ட் பிண்டு!” என அகமகிழ்ந்தாள் அனு.

அறிவியல் அடிப்படை:

முதலில் தண்ணீரில் எண்ணெய் ஊற்றும் போது அடர்த்தி குறைவாக இருக்கும் எண்ணெய் தண்ணீரின் மேலேயே நின்று விடுகிறது.

பிறகு அடர்த்தி மிகக் குறைவான எலுமிச்சை சாற்றினை ஊற்றும் போது அது அடி ஆழத்திற்குச் சென்றுவிடுகிறது. இதனால் கோப்பையின் அடியில் உள்ள நீர் அமிலத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடுகிறது.

இந்த அமிலத்தோடு (ஆசிட்), பேக்கிங் சோடாவில் உள்ள காரத்தன்மையும் (பேஸ்) சேரும் போது, ரசாயன மாற்றம் நிகழ்ந்து கரியமிலவாயுவை (கார்பன் டை ஆக்சைடு) வெளியிடுகிறது.

வெளியேறும் கரியமிலவாயு வண்ண வண்ண நீர்க் குமிழிகளாக வெளியேறி நம் கண்களைக் கவர்கிறது. நீர் குமிழிகள் வருவது நிற்கும் போதெல்லாம் எலுமிச்சை சாற்றினை கொஞ்சம் ஊற்ற மறுபடி குமிழிகள் உருவாகும்.

அப்புறம் என்ன அனைவரும் லாவா லேம்ப்பை செய்து பார்த்து மகிழுங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments