“ஹாய் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்டி இருக்கீங்க. நான் தான் உங்க வினிதா.. இன்னிக்கு நான் தாத்தா பாட்டி கூடச் சேர்ந்து தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய போறேன்”

    “நீங்களும் இத உங்க வீட்ல செஞ்சு பாருங்க. வாங்க தாத்தா பாட்டி வரதுக்குள்ள ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள எடுத்து வைக்கலாம்..”

“ஒரே மாதிரி இருக்குற ஐந்து கப் எடுத்துக்கோங்க.

* முதல் கப்ல கடலைமாவு எடுத்துக்கோங்க.,

* இரண்டாவது கப்ல கொரகொரனு அரைச்ச முந்திரி.,

*மூன்றாவது கப்ல  உருக்குன நெய்,

*நாலாவது கப்ல காய்ச்சி ஆறிய பால்,

*மீதி இருக்குற மூனு கப்லயும் சர்க்கரை எடுத்து வச்சுக்கோங்க..

“ஹை…. தாத்தா,பாட்டி வராங்க இதுக்கப்றம் என்ன  பண்ணனும்னு  அவங்க சொல்வாங்க.. வாங்க சேர்ந்து செய்யலாம்”

  “வினிதா கண்ணு என்ன பண்ணிட்டு இருக்கீங்க”

  “தாத்தா தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன். இதுக்கப்றம் என்ன பண்ணனும்.

 “ஆஹா ஸ்வீட் பண்ணிடலாமே. அடிபிடிக்காத அளவுக்கு கணமான வாணலி இல்ல பாத்ரம்  வேணும்”

  “பாட்டி இதோ இருக்கு இந்தாங்க..”

“வா..வா.. ராமு இத எடுக்கத்தான் போனீங்களா..  ம்ம் சரி வா..”

இந்த மாதிரி வாணலில  நீங்க அளந்து எடுத்து வச்சிருக்கற கடலைமாவு, லேசாப் பொடி பண்ணின முந்திரி, உருக்குன நெய், பால், சர்க்கரை கூடவே வாசனைக்கு ஏலக்காய் பொடி எல்லாத்தையும் போட்டு நல்லாக் கிளறனும்.

  “அந்தக் கலவைய இப்ப அடுப்புல வச்சு மிதமான தீயில கிளறிவிட்டுகிட்டே இருக்கனும். இருபது நிமிடம் கழித்து கேக் கலவை பச்சை வாடை போயி வாணலால ஒட்டாம பிரண்டு வரும். அப்போ அந்த ஸ்வீட்ட நெய் தடவுன தட்டுல கொட்டி லேசா சுத்துனா பரவி வந்துடும். .                                அதுமேல நமக்கு பிடிச்ச மாதிரி குங்குமப்பூ பாதாம் துருவி சதுரம் சதுரமா கட் பண்ணிடனும்” 

7CupCake

*ஆறினதுக்கப்றம் எடுத்தா தனித்தனியா வந்துடும்.  ம்ம் வாசன எப்டி இருக்கு கண்ணுங்களா?”

*ம்ம்.. வாசனை சூப்பர் தாத்தா.. “

“ரெண்டு பேரும் சாப்டு எப்டி இருக்குனு சொல்லுங்க பசங்களா..”

*ம்ம் சரி..”

இருவரும் செவன் கப் கேக்கை உண்டு விட்டு தாத்தா பாட்டியை அணைத்துக்கொண்டு “தாத்தா பாட்டி! கேக் ரொம்ப டேஸ்டா இருக்கு” எனக்கூறி இருவரையும் முத்தமழையில் நனைத்தனர்.

ஃப்ரெண்ட்ஸ் நீங்களும் இந்த தீபாவளிக்கு செவன் கப் கேக் செஞ்சு தீபாவளிய கொண்டாடுங்க.

  அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments