ராமு  : அந்த மான் ஏன் கோயிலைச் சுற்றி சுற்றி வருது?
சோமு : அது பக்திமான்
ராமு : ஏன் உங்க பையன் ஸ்கூலில் ஸ்கேல் வைத்துக் கொண்டு தூங்குறான்?
சோமு :அவன் அளவோடு தூங்குறான்
ராமு : பழம் நழுவிப் பாலில் விழுந்து டம்ளர் உடைஞ்சு போச்சு!
சோமு : ஏன் ?
ராமு : விழுந்தது பலாப்பழம் ஆச்சே!
ராமு : மரியாதை இல்லாத பூ எது?
சோமு : ‘வாடா’ மல்லி
ராமு : என் பையன் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்.
சோமு : ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்கப் போறீங்க?
ராமு : செகண்ட் கிளாஸ்தான்.
ராமு : எலிக்கும், மவுஸுக்கும் என்ன வித்தியாசம்??
சோமு : எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுஸுக்கு வால் முன்னாடி இருக்கும்
ராமு : ஏண்டா லேட்டு..??
சோமு : பள்ளிக்கூடம்.. மெதுவாகச் செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்…
ராமு : மெக்கானிக்குக்குப் பிடித்த சோப் எது ?
சோமு : ‘வீல்’ சோப்!
ராமு : பேச முடியாத வாய் எது ?
சோமு : செவ்வாய்
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments